சென்னை,
இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் மறைவிற்கு டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ், வயது மூப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு டி. ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
“இந்திய திரையுலகில் எண்ணற்ற காவியங்களைப் படைத்து, மூன்று தலைமுறைகளைக் கடந்து முத்திரை பதித்தவர் சிங்கீதம் சீனிவாசராவ், தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளிலும் சிறந்து விளங்கியவர்.
உலக நாயகன் கமல்ஹாசனை உள்ளங்கைகளில் தாங்கிப் பிடித்த உன்னத உள்ளமான அவரின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு, அவரை இழந்து வாடும் கலை உலகத்தினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.