தமிழக செய்திகள்

முதியவரை எரித்துக் கொன்ற மாற்றுத்திறனாளி கைது

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மதுபோதையில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த முதியவர் மற்றும் அவரது மகனிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசில் புகார் அளிக்க சென்ற முதியவரை எரித்துக் கொன்ற மாற்றுத்திறனாளியை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் திக்குறிச்சியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஆல்பர்ட் அஸ்வின் (வயது 38) என்பவர் மதுபோதையில் பக்கத்து வீட்டில் வசித்து வந்த முதியவர் குழந்தைவேல்(86) மற்றும் அவரது மகன் ஜெபமணியிடம்(62) அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

முதியவரை எரித்துக் கொன்ற மாற்றுத்திறனாளி கைது

சம்பவத்தன்று ஜெபமணியின் வீட்டின் சுவரை சேதப்படுத்திய ஆல்பர்ட் அஸ்வின், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கச் சென்ற ஜெபமணியின் தந்தை குழந்தைவேல் மீது பாமாயிலை ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்பர்ட் அஸ்வினை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT