செஞ்சி சிறுமி  
தமிழக செய்திகள்

செஞ்சி சிறுமி மாயமான சம்பவம்: லாரி டிரைவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

செஞ்சி சிறுமி மாயமான சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர்கள் 13 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தை சேர்ந்த வடி வேலு- பவானி தம்பதியினரின் 2-வது மகள் ஹேமலதா என்ற ஹேமாவதி (வயது 7). இவள் கடந்த 11-ந் தேதி மாலையில் தனது பிறந்த நாளை கொண் டாடி முடித்துவிட்டு இரவில் பெற்றோருடன் வீட்டில் படுத்து தூங்கினாள். மறு நாள் (1-ந்தேதி) அதிகாலையில் அவளை திடீரென காணவில்லை.இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறு மியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் எந்தவித துப்பும் துலங்காத தால் இவ்வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிறுமி மாயமாகி 23 நாட்கள் ஆன நிலையில், இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கையில் எடுத்து நேற்றுடன் 13 நாட்கள் முடிந்து விட்டது. இருப்பினும் இவ்வழக் கில் இதுவரையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

சந்தேக நபர்கள்

இந்நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வேல்முரு கன், கீதா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசார ணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டுகள் வேல்முரு கன், கீதா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர்.இதில் சந்தேக நபர்கள், சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு ஆலம்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் உள்ள டீக்கடைகள், ஓட்டல்களில் பணிபுரிபவர்களிடம் அந்த புகைப்படங்களை காண்பித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

13 லாரி டிரைவர்களிடம் விசாரணை

மேலும் சிறுமி மாயமான அன்று இரவு ஆலம்பூண்டி- செஞ்சி சாலையில் சென்ற நேஷனல் பர்மிட் கொண்ட லாரிகளை ஓட்டிய 13 டிரைவர்களை அடை யாளம் கண்டு அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனித்தனியாக வரவழைத்து அவர்களிடம் சிறுமி மாயமானது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி கிடுக் கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வடமாநில தொழிலாளர்கள், டிராக்டர் டிரைவர்கள் என விசாரணை வளையம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT