தமிழக செய்திகள்

பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம்; சவுமியா அன்புமணி

காவிரியில் தடுப்பணைகள் கட்டுவதன்மூலம் கடலில் கலக்கும் தண்ணீரை சேகரிக்க முடியும் என சவுமியா அன்புமணி கூறியுள்ளார்.

சென்னை,

சாப்பாடு போடக்கூடிய விவசாயத் துறைக்கு மிக குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எதிர்பார்த்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை என சவுமியா அன்புமணி கூறினார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் சவுமியா அன்புமணி உரையாற்றினார்.

பாமகவின் 13 வருட கோரிக்கையான சேவை உரிமை சட்டத்தி அமல்படுத்திய தவெக அரசுக்கு வாழ்த்துகள்.

பிறப்பு, இறப்பு உள்ளிட்ட சான்றுகளை விரைவாக வழங்கும் சேவை உரிமைச்சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதலுக்கு நன்றி.

பட்ஜெட்டில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. 5 கோடி விவசாய மக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததும் மிகக்குறைவான தொகை.மகளிர்,விவசாயிகளுக்கான திட்டங்கள், இயற்கை விஞ்ஞானி விருது அறிவிப்பை வரவேற்கிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள 27,000 குளங்களை தூர்வாரினால் போதும் 150 டிஎம்சி வரை நீர் சேமிக்க முடியும். 42,000 ஏரிகள் இருந்த தமிழ்நாட்டில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ளன. அவற்றை 1 மீட்டர் அளவு தூர்வார வேண்டும்.

குறைந்தது 100 டிஎம்சி நீரை சேமிப்பதன் மூலம், அண்டை மாநிலங்களில் கையேந்த வேண்டாம். காவிரியில் தடுப்பணைகள் கட்டுவதன்மூலம் கடலில் கலக்கும் தண்ணீரை சேகரிக்க முடியும். ஆறுகள் இணைப்பு உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டத்திற்கு இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 10 கிமீ ஒரு தடுப்பணைகளை கட்டினால் கேரளா, கர்நாடகாவிடம் நீர் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.

ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரும் திட்டங்கள் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நிலத்தடி நீர்மட்டத்தை நம்பியே விவசாயிகள் உள்ள நிலையில் அதை உயர்த்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை

தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கீடு

இதற்கு பதில் அளித்த அமைச்சர் புஸ்சி ஆனந்த்,

நீர்வளத்துறைக்கு கடந்த ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டதை விட தவெக அரசு கூடுதலாகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் எங்களுக்கும் தான் மாவட்டம். விவசாயிகளின் கோரிக்கை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். முதல்-அமைச்சருடன் கலந்தாலோசித்து சவுமியா கேட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான அனைத்தும் செய்து தரப்படும்-கால்நடைத்துறை அமைச்சர் கமலி உறுதி அளித்தார்.