தமிழக செய்திகள்

ஓடும் ரெயிலில் ஏறிய போது விபரீதம்...மின்னல் வேகத்தில் மீட்ட காவலர்

கால் தவறி நடைமேடைக்கும் ரெயிலுக்கும் இடையேயான இடைவெளியில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

எழும்பூர்,

ஓடும் ரெயிலில் ஏறிய போது தவறி விழுந்த பயணியை மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றிய காவலரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

உயிர் காப்பாற்றிய காவலர்

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 8 மணியளவில் 7-வது நடைமேடையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. ரெயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, ஆண் பயணி ஒருவர் ரெயிலின் பின்புறத்தில் இருந்த முன்பதிவு இல்லாத பொதுப்பெட்டியில் அவசரமாக ஏற முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் தவறி, நடைமேடைக்கும் ரெயிலுக்கும் இடையேயான இடைவெளியில் விழுந்தார். ரெயிலுடன் இழுத்துச் செல்லப்பட்ட அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிக்கிக்கொண்டார்.

பாராட்டு

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் 12-வது பட்டாலியனைச் சேர்ந்த காவலர் தீபக், இதனை கவனித்ததும் உடனடியாக ஓடிச்சென்று, சிறிதும் தாமதிக்காமல் பயணியைப் பிடித்து மேலே இழுத்து பத்திரமாக மீட்டார். காவலர்

தீபக்கின் துரிதமான மற்றும் துணிச்சலான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பயணியின் உயிர் காப்பாற்றப்பட்டது. அவரது துணிச்சலான செயலுக்கு ரயில்வே அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT