தமிழக செய்திகள்

சென்னை ஓன் செயலியில் ஒரு ரூபாய்க்கு சலுகை டிக்கெட்

ஒரே செயலி மூலம் ஒருங்கிணைத்து, டிக்கெட் எடுக்கும் வசதியை இந்த செயலி வழங்குகிறது.

சென்னை,

சென்னை ஒன் என்பது சென்னை மாநகரப் பயணிகளுக்காகத் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த செல்போன் செயலி ஆகும். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பஸ்கள், மெட்ரோ ரெயில்கள், புறநகர் மின்சார ரெயில் கள் மற்றும் ஆட்டோக்கள் அனைத்தையும் ஒரே செயலி மூலம் ஒருங்கிணைத்து, டிக்கெட் எடுக்கும் வசதியை இந்த செயலி வழங்குகிறது.

இந்த நிலையில், சென்னை ஒன் செயலியில் ஒரு ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து பயணிக்கும் சலுகையை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (கும்டா) வழங்கி உள்ளது. இது குறித்து கும்டா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'CUMTA UPI மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்கும் பயணிகளுக்கு முதல் பயண டிக்கெட் மட்டும் ரூ.1-க்கு சலுகையாக வழங்கப்படுகிறது” என்றார்.