தமிழக செய்திகள்

கீழடி 11-வது கட்ட அகழாய்வில் உலைக்கலன் கண்டுபிடிப்பு

கீழடியில் உள்ள புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே அகழாய்வு நடந்து வருகிறது.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் ஏற்கனவே மத்திய-மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு வரை 10 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது இந்த வருடம் 11-ம் கட்ட அகழாய்வு பணிகள் கீழடியில் உள்ள புதிய திறந்தவெளி அருங்காட்சியகம் அருகே ஒருவரது நிலத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கீழடியின் 11-வது கட்ட அகழாய்வுப் பணிகளில் முக்கிய தொல்லியல் கண்டுபிடிப்பாக பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய உலைக்கலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழர்களின் தொழில்நுட்ப வளர்ச்சியை விளக்கும் முக்கிய ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது கிடைத்து வரும் புதிய கண்டுபிடிப்புகள், சங்ககாலத் தமிழர்களின் வாழ்க்கை முறை குறித்த தகவல்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.