சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார் தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? ” என்று பதிவிட்டுள்ளார்.
மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குரியன் குழு கலைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்ட குழு திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது. மாநிலங்களின் உரிமைகளை பாதுகாக்கவும், இந்தியக் கூட்டாட்சிக் கட்டமைப்பை மறுசீரமைக்கும் வகையிலும் குழு. கடல்சார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் கே.அசோக் வர்தன் ஷெட்டி உறுப்பினராக இருந்தார்.
தமிழ்நாடு திட்டக் குழு முன்னாள் துணை தலைவர் மு.நாகநாதனும் உறுப்பினராக இருந்தார். தவெக ஆட்சி அமைந்ததும் குரியன் குழுவின் பணிகளுக்கு அரசு ஒத்துழைப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்தக்குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.