தமிழக செய்திகள்

நோன்பு நிகழ்ச்சியில் டிபன் பாக்ஸ் வினியோகம்: த.வெ.க. நிர்வாகி மீது வழக்குப்பதிவு

த.வெ.க. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடந்த தொழுகையில் பங்கேற்ற அனைவருக்கும் டிபன் பாக்ஸ்களை பரிசாக வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

சேலம் மாநகராட்சி 52-வது வார்டில் கடந்த 20ம் தேதி இரவு ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த.வெ.க. சேலம் மத்திய மாவட்ட செயலாளர் தமிழன் பார்த்திபன் தனது கட்சியினருடன் கலந்து கொண்டு முஸ்லிம்களுடன் தொழுகையில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் தொழுகையில் பங்கேற்ற அனைவருக்கும் டிபன் பாக்ஸ்களை பரிசாக வழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுதொடர்பான புகாரின்பேரில், தமிழன் பார்த்திபன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT