தமிழக செய்திகள்

‘குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் மாவட்ட கலெக்டர் கவனிக்க வேண்டும்’ - மதுரை ஐகோர்ட்டு கிளை

குவாரி நடவடிக்கைகளால் நீர்நிலைகளுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.

மதுரை,

கனிமவள குவாரி அனுமதி தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குவாரிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு முன் மாவட்ட கலெக்டர் கவனிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

மேலும் நீர்நிலைகள் சேதமடையாமல் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் எனவும், குவாரி நடவடிக்கைகளால் நீர்நிலைகளுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ள நீதிபதிகள், தூர விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.