தமிழக செய்திகள்

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடந்தது.

திருச்சி தில்லைநகரில், 10-வது மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நேற்று நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளை டாக்டர் செந்தில்குமார், தேசிய நடுவர் ராஜசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 15 பிரிவுகளில் நடந்த இந்த போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த வீரர்-வீராங்கனைகள் அடுத்த மாதம் (ஜூலை) திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான கராத்தே போட்டியில் விளையாட தேர்வு செய்யப்பட்டனர். மாநில போட்டியின் முடிவில் முதலிடம் பிடிப்பவர்கள் வருகிற டிசம்பர் மாதம் அசாமில் நடைபெறும் தேசிய கராத்தே போட்டியில் விளையாட தேர்வு செய்யப்படுவார்கள்.

SCROLL FOR NEXT