சென்னை,
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடினர். தலைநகர் சென்னையிலும் பட்டாசுகள் வெடித்து மக்கள் பண்டிகையை கொண்டாடினர். இதனிடையே, ஒரே நேரத்தில் அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இரவு நேரத்தில் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்வமுடன் பட்டாசுகளை வெடித்தனர்.
ஒரே நேரத்தில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்ததால் சென்னை மாநகரமே நேற்று இரவு முதல் அதிகாலை வரை புகை மண்டலமாக காட்சியளித்தது. கண் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமம் என பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை எதிர் கொண்டனர்.
இந்தநிலையில், தீபாவளிக்கு பட்டாசு வெடித்ததால் சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மிக மோசம் அடைந்துள்ளதாக காற்று மாசு மற்றும் ஒலி மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட தகவலின்படி,
தீபாவளி நாளான நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை, காற்றுத்தர அளவு கண்காணிக்கப்பட்டது.
* குறைந்தபட்சமாக திருவொற்றியூரில் 183(மிதமான அளவு) ஆகவும், அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 343(மிக மோசமான அளவு) என பதிவு
* நுங்கம்பாக்கம் (332), வளசரவாக்கம் (343), சௌகார்பேட்டை (311) மற்றும் தி. நகர் (306) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம்.
* 2024, 2025 ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தீபாவளி அன்று காற்று மாசு அதிகரித்துள்ளது.
* 2024ஆம் ஆண்டில் 143.46 ஆகவும், 2025ஆம் ஆண்டில் 161.69 ஆகவும் இருந்து, 2026ஆம் ஆண்டில் மேலும் அதிகரித்து 168.97 ஆக பதிவாகி உள்ளது.