தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து 14.70 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இல்லாமல் சாரை சாரையாக கார்கள் செல்வதையும் காண முடிந்தது.

சென்னை,

தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 14 லட்சத்து 70 ஆயிரம் பேர் சொந்த ஊர் பயணித்துள்ளனர்.

இன்று தீபாவளி கொண்டாட்டம்

வேலைவாய்ப்பு, கல்வி, தொழில் மற்றும் வணிகம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை வந்து குடியேறி வசித்து வருபவர்கள் விழாக்காலங்களில் தங் கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில், இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாட பெரும்பாலானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள நிலையில் நேற்றும் ஏராளமானோர் சொந்த ஊர் சென்றனர்.

அதாவது, குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடச் செல்பவர்கள், அரசு வேலைபார்ப்பவர்கள், கல்வி நிறுவனங்களில் வேலைபார்ப்போர் மற்றும் மாணவர்கள் என பெரும்பாலானோர் நேற்று முன்தினமே தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். நேற்றும் சென்னையில் இருந்து புறப்பட்டு தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

சாரை... சாரையாக...

இதனால், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், ஆம்னி பஸ்கள் புறப்படும் கோயம்பேடு, போரூர் சுங்கச்சாவடி பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. எனினும், கடுமையான நெரிசல் இன்றி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதை காணமுடிந்தது. அதேபோன்று, திருச்சி, விழுப்புரம், திண்டிவனம், அரியலூர், கள்ளக்குறிச்சி போன்ற அருகில் உள்ள இடங்களுக்கும், தொலை தூரங்களுக்கும் பலர் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும் புறப்பட்டு சென்றனர்.

எனினும், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இல்லாமல் சாரை சாரையாக கார்கள் செல்வதையும் காண முடிந்தது. அதேபோன்று, சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரெயில் நிலையங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் மக்கள் ரெயில்களில் முண்டியடித்து ஏறி முன்பதிவில்லாத பெட்டிகளில் இடம் பிடித்ததை பார்க்க முடிந்தது.

அரசு, ஆம்னி பஸ்களில்...

அரசு பஸ்களில், கடந்த 5-ந் தேதி 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயணித்துள்ள நிலையில், 6-ந் தேதி (நேற்று முன்தி னம்) வழக்கமான பஸ்களுடன் சிறப்பு பஸ்களும் சேர்த்து 5 ஆயிரத்து 87 பஸ்களில் 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். இதேபோல் நேற்று கடந்த 5-ந் தேதியை போன்று 1 லட்சத்து 40 ஆயிரம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆம்னி பஸ்களை பொறுத்தவரையில் கடந்த 5-ந்தேதி 56 ஆயிரம் பேர், 6-ந்தேதி (நேற்று முன்தினம்) 79 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணித்துள்ள நிலையில், நேற்றும் 56 ஆயிரம் பேர் ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்து பயணித்திருப்பதாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.

14 லட்சத்து 70 ஆயிரம் பேர்

இதேபோன்று, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட சென்னை சென்டிரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரெயில் நிலை யங்களில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 3 லட்சம் பேர் பயணித்திருக்கலாம் என்ற நிலையில், நேற்று சுமார் 2 லட்சம் பயணிகள் தீபாவளி கொண்டாடுவதற்காக ரெயில்களில் சொந்த ஊர்களுக்கு சென்று இருப்பார்கள் என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதேபோன்று, சொந்தக்கார்கள் மற்றும் வாடகை கார்களிலும், இதர வாகனங்களின் மூலமாகவும் நேற்று முன்தினம் சுமார் 12 லட்சம் பேர் பயணித்துள்ள நிலையில், நேற்று சுமார் 1 லட்சம் பேர் கார்களில் சொந்த ஊர்களுக்கு சென்றிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. ஆக மொத்தத்தில், தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து சுமார் 14 லட் சத்து 70 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT