சென்னை,
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரெயில்களில் பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் 5 முன்பதிவில்லா சிறப்பு மெமு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரெயில்களின் இயக்க விவரங்கள் வருமாறு:
தாம்பரம் - மானாமதுரை முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06161) நவம்பர் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு மானாமதுரையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், மானாமதுரை - தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06162) நவம்பர் 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, அன்று பிற்பகல் 3.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
தாம்பரம் - மானாமதுரை முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06159) நவம்பர் 7-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4.35 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1.45 மணிக்கு மானாமதுரையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், மானாமதுரை - தாம்பரம் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06160) நவம்பர் 9-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06191) நவம்பர் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
திருச்சிராப்பள்ளி - தாம்பரம் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06192) நவம்பர் 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 11.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06193) நவம்பர் 7-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு திருச்சியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், திருச்சிராப்பள்ளி - சென்னை எழும்பூர் முன்பதிவில்லா மெமு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06194) நவம்பர் 9-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையில் 12 பெட்டிகள் கொண்ட மெமு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மேற்கண்ட அனைத்து ரெயில்களும் தலா ஒரு சேவை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.