சென்னை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 567.41 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
தீபாவளி பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு மக்கள் காலையிலேயே எழுந்து, குளித்து, புது ஆடைகளை அணிந்து, பலகாரம் உண்டும், பகிர்ந்தும், சிறப்பாக கொண்டாடினர். இதேபோன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.
இதனால், பல பகுதிகளில் பட்டாசு கழிவுகளும் சேர்ந்தன. இந்நிலையில், சென்னை முழுவதும் கடந்த 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 567.41 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. பட்டாசு கழிவுகளை பாதுகாப்பாக கையாள 30 ஆயிரம் பைகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன. அவற்றை கொண்டு கழிவுகள் அகற்றப்பட்டு, அவை பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.