தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை: மதுரையில் பஸ், ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி, பஸ், ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாப்படுகிறது. தீபா வளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட அனைவரும் விரும்புவர். அதற்கு ஏற்றார் போல், தமிழக அரசு சார்பில் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) என 3 தினங்கள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த தொடர் விடுமுறையை பயன்படுத்தி, சென்னை, கோவை, பெங்களூரு போன்ற வெளிநகரங்களில் வசித்து வந்தவர்கள் பண்டிகையை கொண்டாடுவதற்காக, மதுரை வந்தனர்.

இதுபோல், மது ரையில் உள்ள வெளிமாவட்ட மக்களும், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக, ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. நேற்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டதால், காலை நேரத்தை காட்டிலும் மாலை நேரத்தில் பஸ், ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. அதன்படி, சொந்த ஊருக்கு செல்வதற்காக குழந்தைகளை அழைத்து கொண்டும். கைகளில் பெரிய பெரிய துணி பைகளுடன், மக்கள் கூட்டம் கூட்டமாக காத்திருந்தனர்.

ரெயில் நிலையம்

பண்டிகை காலங்களில் மதுரை ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் நேற்றும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. குறிப்பாக முன்பதிவில்லாத பெட்டிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆர்வத்தில், தங்களுக்கான இடத்தை பிடிப்பதற்காக ஒவ்வொரு ரெயிலிலும் மக்கள் முண்டிய டித்து கொண்டு ஏறியதை காணமுடிந்தது. வட மாவட்டங்களுக்கும். தென் மாவட்டங்களுக் கும் அவர்கள் ரெயிலில் ஏறி பயணித்தனர்.

ரெயில் நிலையம் மட்டுமின்றி பஸ் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதாவது மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம், ஆரப்பாளையம் உள் ளிட்ட பஸ்நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்களின் வசதிக்காக மது ரையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு வழக்கத்தை விட கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக் கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில் பயணிகள் அனைவ ரும் குடும்பம், குடும்பமாக பண்டிகையை கொண்டாட பயணித்தனர். ஒரு சில ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பய ணிகள் கோரிக்கை வைத்தனர்.

SCROLL FOR NEXT