சிறப்பு ரெயில் 
தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை: கன்னியாகுமரி-பீகார் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (7-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சேலம்,

தீபாவளி பண்டிகையொட்டி கன்னியாகுமரியில் இருந்து போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக பீகார் மாநிலம் பரவுனிக்கு ஒரு வழி சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி பரவுனி சிறப்பு ரெயில் (06187) வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படுகிறது.

நாகர்கோவில், திருவனந்தபுரம். கொல்லம், காயங்குளம், ஆலப்புழா, எர்ணாகுளம், பாலக்காடு வழியாக பயணித்து அன்று இரவு 9.25 மணிக்கு சேலம் வந்தடைகிறது. பின்னர் சேலத்தில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணி குண்டா, விஜயவாடா உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்கள் வழியாகச் சென்று வருகிற 11-ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனி சந்திப்பை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று (7-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT