தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை; எழும்பூர்-திருச்சி, தாம்பரம்-மானாமதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் நாளை இயக்கம்

திருச்சியில் இருந்து வருகிற 9-ந்தேதி இரவு 10.45 மணிக்கு எழும்பூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை

தீபாவளி பண்டிகையையொட்டி எழும்பூர்-திருச்சி, தாம்பரம்-மானாமதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில்கள் நாளை இயக்கப்படுகின்றன.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாம்பரம்-மானாமதுரை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி தாம்பரத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கும் 7-ந்தேதி மாலை 4.35 மணிக்கும் மானாமதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதேபோல, மானாமதுரையில் இருந்து வருகிற 7-ந்தேதி காலை 6.30 மணிக்கும், 9-ந்தேதி இரவு 10 மணிக்கும் தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில் இருந்து நாளை மாலை 6.30 மணிக்கும். வருகிற 7-ந்தேதி இரவு 7 மணிக்கும் திருச்சிக்கு சிறப்பு முன்பதிவில்லா ரெயில் இயக்கப்படுகிறது. அதேபோல, திருச்சியில் இருந்து வருகிற 7-ந்தேதி காலை 5.50 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு முன்பதிவில்லா ரெயில் இயக்கப்படுகிறது. மேலும், திருச்சியில் இருந்து வருகிற 9-ந்தேதி இரவு 10.45 மணிக்கு எழும்பூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT