கோப்புப்படம்  
தமிழக செய்திகள்

தீபாவளி விடுமுறை: ஞாயிறு அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு, இன்று மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

சென்னை

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை

தீபாவளிப்பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடி, சிரமமின்றி பணியிடங்களுக்கு திரும்பும் வகையில் இன்று பொது விடுமுறை அளித்து ஏற்கனவே தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்

இந்த நிலையில் இன்று விடுமுறை தினமாக இருப்பதால், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு, இன்று (9-11-2026) மெட்ரோ ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

நீலம் மற்றும் பச்சை வழித்தடம்

நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படும். அதன்படி காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படும்.

மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மஞ்சள் வழித்தடம்

மஞ்சள் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். எனவே, பயணிகள் இந்த கால அட்டவணையை கருத்தில் கொண்டு தங்களது பயணங்களை திட்டமிட்டு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT