தமிழக செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு நல்லம்பள்ளி சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நல்லம்பள்ளி சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

தர்மபுரி,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி நல்லம்பள்ளி சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புத்தாடைகள், பட்டாசுகள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது. இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கால்நடை சந்தைகளில் ஆடுகள், மாடுகள் விற்பனையும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நல்லம்பள்ளி வாரச்சந்தை

நல்லம்பள்ளியில், இன்று அதிகாலை வாரச்சந்தை கூடியது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இந்த ஆடுகளை வாங்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், பொதுமக்கள் சந்தைக்கு வந்திருந்தனர்.

ரூ.4 கோடிக்கு விற்பனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கினர். சந்தையில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை எடைக்கு ஏற்றார் போல் ஆடுகள் விற்பனையானது. சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடுகள் கடந்த வாரத்தை விட இந்த வாரம் கூடுதல் விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT