தமிழக செய்திகள்

கடை வீதிகளில் களைக்கட்டிய தீபாவளி ஷாப்பிங்; ஜவுளிக்கடைகளில் அலைமோதும் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க சென்னை தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னை,

தீபாவளி என்றாலே புத்தாடை, பலகாரம், பட்டாசுதான் அனைவருடைய நினைவுக்கும் வரும்.

தீபாவளி பண்டிகை

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. பண்டிகைக்கு இன் னும் ஒருவார காலம் முழுமையாக உள்ள நிலையில், தீபாவளி பண்டிகை கால விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

ஜவுளி, இனிப்பு, பட்டாசுக் கடைகளில் தீபாவளி பண்டிகை விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஜவுளிக் கடைகளில் நன்றாகவே இருப்பதாகவும், இனிப்பு கடைகளில் சற்று மந்தமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பட்டாசு கடைகளை பொறுத்தவரையில் அது கடைசி நேர விற்பனை என்பதால் இனிதான் சூடுபிடிக்கும் என்கிறார்கள்.

ஜவுளி விற்பனை படுஜோர்

ஜவுளி விற்பனையை பொறுத்தவரையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விலை சற்று உயர்ந்திருந்தாலும், அது மக்களை பாதிக்கும் வகையிலான உயர்வாக இல்லை என்றும், இது ஒவ்வொரு ஆண்டும் 5 முதல் 10 சதவீதம் வரையிலான விலை உயர்வாகவே பார்க்கப்படுகிறது என்றும் ஜவுளி கடைக்காரர்கள் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

கோவை மாநகரின் முக்கிய கடைவீதிகளில் புத்தாடைகள், தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, ராஜ வீதி, வைசியாள் வீதி உள்ளிட்ட முக்கிய வணிகப் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களில் விற்பனையும் களைகட்டியுள்ளது. பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளதால், கோவை மாநகர காவல்துறை சார்பில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வணிகப் பகுதிகள் முழுவதும் விழாக்கோலம்

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதுடன், குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் முக்கிய சாலைகளில் வாகனங்களை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் பாதுகாப்பாகச் சாலையைக் கடப்பதற்காகச் சாலையின் இருபுறங்களிலும் கயிறுகள் கட்டப்பட்டு, போலீசார் வழிகாட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வணிகப் பகுதிகள் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளன.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க சென்னை தி.நகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது, வீதியெங்கும் மனித தலைகளாகவே காட்சி அளித்தன. சென்னை தி.நகர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் களைகட்டியது. தீபாவளி ஷாப்பிங்.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் புத்தாடைகளை வாங்க ஜவுளிக் கடைகளில் அலைமோதியது.

தீபாவளி ஷாப்பிங் உற்சாகம்

சிங்காரத்தோப்பு, மலைக்கோட்டை சாலை கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.மதுரை மாசி வீதி, மாட்டுத்தாவணி உள்ளிட்ட வீதிகளில் களைகட்டியது தீபாவளி ஷாப்பிங்.சிவகாசியில் பட்டாசு மற்றும் புத்தாடை வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்தனர். இதேபோல் தமிழகமெங்கும் உள்ள முக்கிய கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

SCROLL FOR NEXT