தமிழக செய்திகள்

தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

முத்துப்பேட்டை நகராட்சியில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

முத்துப்பேட்டையில் ஒன்றிய, நகர தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் ஒன்றிய அவைத்தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவைத்தலைவர் முகமது யூசூப் முன்னிலை வகித்தார். முன்னதாக நகர செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் வரவேற்றார். இதில் ஒன்றிய செயலாளர் மனோகரன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) திருவாரூரில் நடக்கும் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும். புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை நிர்வாகிகள் அனைவரும் துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும். கட்சி பணிகளை தொய்வின்றி செயலாற்ற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து