தமிழக செய்திகள்

திமுக, அதிமுக, பாஜக சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி - அமைச்சர் நிர்மல் குமார்

பத்திரப்பதிவு சீரமைப்பு முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மல் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை,

பாஜகவுடன் பேச்சு நடத்துவதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே கூறிவிட்டார்; ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடைசி முயற்சியாக பாஜகவுடன் சேர முடிவு செய்துள்ளனர்

யாருக்கு, எத்தனை பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி என்பதில்தான் போட்டி நடக்கிறது அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.

திமுக, அதிமுக, பாஜக, சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி

தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பின் தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

திமுக, அதிமுக, பாஜக, சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி நடப்பதாக பல நாட்களாக சொல்லி வருகிறோம். திமுக, அதிமுக, பாஜக, சேர்ந்து ஆட்சியமைக்க முயற்சி நடப்பதாக பல நாட்களாக சொல்லி வருகிறோம்.

திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் கைகோர்த்துக்கொண்டு, தமிழகத்தில் ஆட்சியைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற சதி செய்கின்றன..பணத்தை வாரி இறைத்து தவெக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க முயற்சி நடக்கிறது.அடுத்த ஒரு வருடத்தில் அதிமுகவும் திமுகவும் கட்சி நடத்த முடியாமல் பாஜகவுடன் கட்சியை இணைத்து விடும்.யாருக்கு, எத்தனை பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி என்பதில்தான் போட்டி நடக்கிறது.

பாஜகவுடன் பேச்சு நடத்துவதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே கூறிவிட்டார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களை ரூ.50 கோடி வரை கொடுத்து வாங்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

அதிமுக போன்ற பெரிய இயக்கத்தை லெட்டர் பேட் இயக்கம் போன்று பழனிசாமி மாற்றிவிட்டார்.ஸ்டாலின், பழனிசாமி குடும்பத்தினர் பாஜக அமைச்சரவையில் மத்திய அமைச்சர்கள் ஆக உள்ளனர்.

மின்ஸ்டர் கட்டிங்

திமுக ஆட்சியில் ஊழலில் திளைத்துள்ளது பத்திரப்பதிவுத்துறை. பத்திரப்பதிவுதுறையில் முன்பு அமைச்சராக இருந்த மூர்த்தி மினிஸ்டர் கட்டிங் என பணம் வாங்கினார். அமைச்சருக்கான கட்டிங் வாங்குவதற்கென்றே ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆட்கள் இருந்தனர். ஒவ்வொரு அலுவலகத்திலும் ஆள்போட்டு மின்ஸ்டர் கட்டிங் என தொகையை வசூலித்தார் மூர்த்தி. தவெக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையை முழுமையாக சீரமைப்போம்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இரவு 9 மணி வரை நடைபெற்ற பத்திரப்பதிவு நடைமுறைகள் தற்போது முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இனி பத்திரப்பதிவு முறையில் முறைகேடு அல்லது ஊழலில் ஈடுபடும் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.தவெக ஆட்சியில் பத்திரப்பதிவு துறையை முழுமையாக சீரமைப்போம்.

பழனி கோவில் விவகாரம்

பழனி கோவில் நில விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். எந்த இடத்திலும் அரசு துணை போகவில்லை. தற்போதைய ஆட்சியில் பர்சன்டேஜ் கலாசாரத்திற்கு இடமில்லை. பழனி கோவில் நிலம் தொடர்பான விவகாரத்தில் அரசு சார்ந்த யாருக்கும் தொடர்பில்லை.

முந்தைய ஆட்சியில் திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

காவல் மரணங்கள்

காவல் மரணங்களை முந்தைய ஆட்சிகள் மூடி மறைக்க முயன்றன. காவல் மரணங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். யாரையும் காப்பாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை. சபரிவர்மன் குடும்பத்தினரை விரைவில் அமைச்சர்கள் சந்திப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.