சென்னை,
திமுக கூட்டணிக்குள் எம்.பி. ஆகி வசதிக்கு எஸ்கேப் ஆனவர் மாணிக்கம் தாகூர் என்று கனிமொழி சோமு தெரிவித்தார். "அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை; தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ அது எங்கிருந்து வந்தாலும் அதை ஆமோதிப்போம் பாஜகவுடன் நட்பு பாராட்டுகிறதா திமுக என்ற கேள்விக்கு திமுக முன்னாள் எம்.பி. கனிமொழி சோமு பதில் அளித்தார்.
இது குறித்து, மாணிக்கம் தாகூர் தனது தனது எக்ஸ் தள பதிவில்,
அப்படியா …இப்பொழுது உண்மை வெளியே வருகிறது ஏன் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு வரவில்லை என்பது என்று மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பதிவில் கூறினார்.
அதற்கு பதிலாடியாக கனிமொழி சோமு இது தொடர்பாக, தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது:- ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்..
உங்கள் சோபா மாடல் முதலாளி பேப்பரைக்கூட படிக்காமல் சட்டமன்றத்தில் எங்கள் இளந்தலைவரிடம் கொட்டு வாங்கியதைப்போல, யார் மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார்கள், யார் யார் பங்கேற்பார்கள் என்ற அடிப்படை அறிவு துளியும் இல்லாமல் திமுகழகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த ஊருக்கு முன்பு கதறிக்கொண்டிருக்கிறீர்கள் தி.மு.கழக கூட்டணிக்குள் எம். பி. ஆகி வசதிக்கு எஸ்கேப் ஆன மாணிக்கம் தாகூர் சார். முதலில் நீங்களும் பேப்பரை படிக்க ஸ்டாட் பண்ணுங்க!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.