தமிழக செய்திகள்

கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிட மணி வெற்றி

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிட மணி வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி,

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு தொகுதிகளில் வெற்றி விவரங்கள் தெரியத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் திராவிட மணி வெற்றி பெற்றுள்ளார்.

திராவிட மணி 65,590 வாக்குகளை பெற்று 22,833 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் 42,757 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் தீபக் சாய் கிஷோர் 34,962 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

தவெக தொடர்ந்து பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தற்போதய நிலவரப்படி தவெக 111 இடங்களிலும், திமுக 66 இடங்களிலும், அதிமுக 57 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.