தமிழக செய்திகள்

15-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், வருகிற 15-ந்தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு;

”கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்" 15-03-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில்" நடைபெறும். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். பொருள்: 2026 சட்டப்பேரவைத் தேர்தல்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.