பழனி,
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட த.வெ.க. 108 இடங்களை பிடித்தது. தி.மு.க. 59 இடங்களில் வென்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனாலும் சென்னை கொளத்தூரில் போட்டியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.
இது தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் இடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் பழனி அடிவாரத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் மோகன்ராஜ், முத்துக்குமார். காளிமுத்து ஆகிய 3 பேர் நேற்று அடிவாரம் பூங்கா ரோடு பகுதிக்கு வந்தனர்.
அவர்கள் அங்கு மொட்டை அடித்து வருத்தத்தை வெளிப்படுத்தினர். பின்பு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் வெல்வார் என கோஷங்கள் எழுப்பினர்.