தமிழக செய்திகள்

அண்ணா ஆரம்பித்த தி.மு.க. தில்லுமுல்லு கழகமாக மாறிவிட்டது; துரை வைகோ எம்.பி. குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் அவர் மீது குற்றம் இருந்தால் முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன் என வைகோ கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் துரை வைகோ எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பொது அமை தியை காத்திடும் விதமாக, ஆகம விதிகளுக்கு உட் பட்டு திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றியதை பா.ஜனதா, அ.தி.மு.க.வை தவிர்த்து ம.தி.மு.க. உள் பட அனைத்து இயக்கங்களும் வரவேற்றுள்ளன. தி.மு.க. கூட்டணியில் உள்ள சிறுபான்மை அமைப்பு களும் இதனை பாராட்டியுள்ளன. தி.மு.க. மட்டும் தான் இதனை வெளிப்படையாக பாராட்டவில்லை.

அண்ணா மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, சமூகநீதி, எளியவருக்கான அரசியல் கோட்பாட்டை முன்வைத்து தி.மு.க.வை ஆரம்பித்தார். இன்றளவும் அந்த கொள்கை பிடிப்பில் பலர் இருந்து வருகின்றனர். இப்போது அந்த தி.மு.க.வை தில்லுமுல்லு கழகமாக, கொள்ளையர்களின் கூடாரமாக இன்றைய தி.மு.க. தலைமை மாற்றிவிட்டது.கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. விவகாரத்தில் அவர் மீது குற்றம் இருந்தால் முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே கூறி இருந்தேன். ஆனால் தில்லுமுல்லு கழகம் நானும் எம்.எல்.ஏ. தவறு செய்ய வில்லை என்று பேசியதாக இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

84 வயது கொண்ட வைகோவுக்கு மறதி உள்ளது, உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறார். இளம் வயதினரை கொண்டு கேள்வி கேட்க வைத்து அவரை உணர்ச்சிவசப்படுத்தி அதில் தி.மு.க.வினர் சுகம் காண்கிறார்கள். என்னை அடியுங்கள், சோசியல் மீடியாவில் போடுங்கள், நான் பதில் தருகிறேன். 84 வயதுடைய மனிதரை சோசியல் மீடி யாவில் போடுவதை கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT