தமிழக செய்திகள்

தாமிரபரணி பகுதிகளை கொலைகளின் கூடாரமாக்கிய திமுக அரசு - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திமுக அரசை தேர்தலில் தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”தாமிரபரணி பகுதிகளைக் கொலைகளின் கூடாரமாக்கிய திமுக அரசு!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மூன்று மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் முப்பது படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாக வெளிவந்துள்ள பத்திரிகைச் செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.

தமிழர் நாகரிகத்தின் தொட்டிலான தாமிரபரணி நதிக்கரை பகுதிகளைக் கொடூர கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் திமுக அரசின் ஒரே சாதனை! தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிதைத்து சீரழிய விடும்

திமுக அரசை, வரும் தேர்தலில் தயவுதாட்சண்யமின்றி நிராகரிப்பர் தமிழக மக்கள்!”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.