அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு விழாவிற்கு பின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக திமுக சொல்லவில்லை, இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்காதது வேறு இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவது என்பது வேறு. திமுக இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக எந்த தகவலும் எனக்கு வரவில்லை” என்றார்.
முன்னதாக, இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த தி.மு.க, டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தை புறக்கணித்தது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தங்களை விடுத்து விஜய்யின் த.வெ.க-வுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்ததை "முதுகில் குத்திய துரோகம்" என விமர்சித்துள்ள தி.மு.க, இந்தியா கூட்டணியில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாகவும், இனி அதன் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.