தமிழக செய்திகள்

போதை மாபியாக்களிடம் இளைஞர்களின் எதிர்காலத்தை அடகு வைத்துவிட்டது திமுக - எடப்பாடி பழனிசாமி

மாவீரர் தீரன் சின்னமலையின் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 270-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தீரன் சின்னமலையில் பிறந்தநாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய சுதந்திர போரில் நெஞ்சுரத்தோடு தனது இறுதி மூச்சு வரை போராடி, அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து, தன் இன்னுயிர் நீத்த வீரத்தமிழ்மகன், ஓடாநிலைக்கோட்டையின் ஒப்பற்ற மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்தநாளில் அவர்தம் வீரத்தையும், புகழையும் போற்றி வணங்குகிறேன்.

அன்று சின்னமலையைக் காட்டிக் கொடுத்த துரோகியைப் போல, இன்றும் கர்நாடக காங்கிரஸ் அரசிடம் தமிழ்நாட்டின் நீராதார உரிமைகளையும், பாலியல் SIR-களிடம் தமிழகப் பெண்களின் பாதுகாப்பையும், போதை மாபியாக்களிடம் இளைஞர்களின் எதிர்காலத்தையும் அடகு வைத்துவிட்டது திமுக எனும் தீயசக்திக் கூட்டம்.

ஒவ்வொரு தமிழரின் வாழ்வையும் காக்க வேண்டிய வரலாற்றுப் போர்களத்தில், சின்னமலை விதைத்த தீரத்தோடு சமர் செய்து, தீயசக்தி திமுகவை வேரடி மண்ணோடு வீழ்த்திட சூளுரைக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT