தமிழக செய்திகள்

தி.மு.க. வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றாலும் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் வெற்றி பெற்றதாக அர்த்தம் கிஷன்ரெட்டி பேட்டி

தி.மு.க. வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றாலும் அது மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் வெற்றி பெற்றதாக தான் அர்த்தம் என மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை துறைமுகம் தொகுதி சட்டசபை தேர்தல் பணிக்குழு ஆலோசனை குழு கூட்டம் சென்னை சென்டிரல் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் அருகில் உள்ள வால்டக்ஸ் சாலை, பொன்னப்பன் தெருவில் உள்ள கத்திரி சமாஸ் பவனில் நேற்று நடந்தது. தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை மந்திரியுமான கிஷன் ரெட்டி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் முன்னிலை வகித்தார். துறைமுகம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி. செல்வம் உள்பட பா.ஜ.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் வியூகம் தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடந்து உள்ளது.

குடும்பத்தினர் வெற்றி

பின்னர், மத்திய இணை மந்திரி கிஷன் ரெட்டியிடம் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசாரத்தில் அ.தி.மு.க.வில் ஒருவர் வெற்றி பெற்றாலும் அது குறித்து பா.ஜ.க. வெற்றி பெற்றதாக தான் அர்த்தம் என்று கூறி உள்ளாரே?

பதில்:-தி.மு.க. ஒரு குடும்ப கட்சி. அது ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக மாறிவிட்டது. தி.மு.க. வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றாலும் அது மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் வெற்றி பெற்றதாக தான் அர்த்தம்.

தேர்தல் கருத்து கணிப்பு

கேள்வி:- தேர்தல் கருத்துகணிப்பு உங்களுக்கு எதிர்மறையாகவே வருகிறதே?

பதில்:- கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பொய். ஓட்டுகள் எண்ணிக்கையின் போது உண்மை நிலவரம் தெரிய வரும்.

கேள்வி:- தமிழகத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டதா?

பதில்:- பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. தமிழகத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் வருகை தர உள்ளனர். பா.ஜ.க. உறுப்பினர்கள் சட்டசபையில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இடம் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்