செங்கல்பட்டு,
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர பிரசாரம் மேற்கொண்டு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் 5 முனை போட்டி நிலவுவதால், ஒவ்வொரு கட்சி பிரமுகர்களும் மதுராந்தகத்தில் முகாமிட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளில் பிரசாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதையொட்டி இந்த வாரத்தில், கட்சிகளின் தலைவர்கள், 2 தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் பரந்தாமனை ஆதரித்து, அந்த கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், இன்று பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இதில், கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நேற்றுவரை தீவிரமாக நடைபெற்றது. வரும் செவ்வாய்க்கிழமை (6- ந்தேதி) இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், நாளையுடன் 2 தொகுதிகளிலும் பிரசாரம் முடிவடைகிறது.