கோப்பு படம் 
தமிழக செய்திகள்

முதல் அமைச்சர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

முதல் அமைச்சர் விஜய்க்கு முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தமிழக முதல் அமைச்சர் விஜய் இன்று தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினும் பிறந்த நாள் வாழ்த்து கூறினார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், முதல் அமைச்சர் .ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வாழ்த்து

முதல்வர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மக்கள் கொடுத்த உயரத்தை அதே மக்களுக்காக உதறிவிட்டு சேவையாற்ற வந்தீர்கள்; "மக்கள்தானே மன்னர்கள்" என்ற மக்களாட்சியின் மகத்துவத்தை அறிவித்தீர்கள்; மக்கள் விரும்பிய முதல்வராக, மக்களில் ஒருவராகத் தேர்தலில் வென்று, மக்களாட்சித் தலைமையை ஏற்றீர்கள்!இப்போது, காலை முதல் இரவு வரை நேரம் காலம் பார்க்காது "மக்கள் ஊழியனாக" அலுவல் பணியை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். அன்று நாயகனாக உங்களைக் கொண்டாடிய மக்களுக்கு, இன்று ஜனநாயகனாக தன் வாழ்வை ஒப்படைத்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகிறீர்கள்.

"மக்களிடம் செல்" என்று கூறி பல சாமானியர்களையும் தலைவர்களாக்கி அழகு பார்த்தார் பேரறிஞர் அண்ணா. "மக்கள் கொடுத்த பொறுப்பை ஒருபோதும் மறக்காதே" என்று கூறி, அரைநூற்றாண்டுக்கு பிறகு எளிய வீட்டுப் பிள்ளைகளின் கைகளில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்கள் பணியை வழங்கி மக்களாட்சியை அலங்கரித்திருக்கிறார் எங்கள் அண்ணன். உங்கள் கொள்கை பாதையிலும், அரசியல் உறுதியிலும், மக்கள் பணியிலும் என்றும் உங்களோடு உடன் பயணிப்போம்.