தமிழக செய்திகள்

மதுரையில் பயங்கரம்...! தி.மு.க. பிரமுகர் கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி கொலை...!

மதுரை திருமங்கலம் அருகே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் திமுக பிரமுகரின் உடல் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரையூர்,

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கூவலப்புரம்-காவட்டுநாயக்கன்பட்டி சாலையில் உள்ள கிணறு ஒன்றில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த வெங்கடாசலபதி மகன் பாலாஜி (வயது 25) என்பது தெரியவந்தது. இதுகுறித்து பேரையூர் போலீசார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி அருகே உள்ள எம்.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவரது மகன் பாலாஜி (25), தி.மு.க பிரமுகரான இவர் எல்.எல்.பி. பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் மனைவி தர்ஷினி. இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது 

தர்ஷினிக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. குழந்தை பிறந்ததால் தர்ஷினி கோவில்பட்டியில் உள்ள தனது தாயின் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 24 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற பாலாஜி வீடு திரும்பவில்லை. அதனால் அவரது பெற்றோர்கள் மனைவியை பார்க்க சென்று இருக்கலாம் என நினைத்து விட்டு அமைதியாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், எம். சுப்புலாபுரம் அருகே சிட்டுலொட்டிபட்டி பகுதியில் சாமிராஜ் என்பவரது விவசாய கிணற்றில் ஆண் உடல் ஒன்று மிதப்பதாக காடனேரி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்து வந்த பேரையூர் போலீசார் சம்பவ இடத்தில் வந்து கிணற்றில் கிடந்த உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டனர்.

இதில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடம்பு முழுவதும் சாக்கால் போர்த்தி இருந்தது. சாக்கை அகற்றி பார்த்த போது, உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதையடுத்து இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு சென்ற திமுக பிரமுகர் பாலாஜிதான் அது என்பது தெரியவந்தது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்