தமிழக செய்திகள்

தி.மு.க.வின் மோசமான தோல்விக்கு தி.மு.க.வினர் தான் காரணம்- முன்னாள் அமைச்சர் மூர்த்தி

தி.மு.க. நாசமா போன துக்கும், மோசமான தோல்விக்கும் காரணமே தி.மு.க. காரன் தான என்று மூர்த்தி காட்டமாக பேசினார்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடந்தது. இதில் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் வணிக வரித்துறை அமைச்ச ருமான மூர்த்தி கலந்து கொண்டு பேசிய தாவது:- தி.மு.க. ஆட்சியில் நமது தலைவர் மக்களு க்காகப் பல திட்டங்க ளைச் செய்தி ருக்கிறார். ஆனால், அதைப் பற்றி இப்போது பேசி பிரயோஜனம் இல்லை. அதைப்பற்றி நினைத்தும் பிரயோஜனம் இல்லை. மக்கள் நமக்கு ஒரு நல்ல பாடம் கொடுத்திருக்கிறார் கள். அந்தப் பாடத்திற்கு நன்றி. (அப்போது தி.மு.க.வினர் கைதட்டினர்.)

தோற்று போனதுக்கு கைதட்டுங்க. அதனாலதான் நாம் விளங்காமல் உட் கார்ந்திருக்கோம். தி.மு.க. நாசமா போன துக்கும், மோசமான தோல்விக்கும் காரணமே தி.மு.க. காரன் தான். இனிமேல் மக்களு க்குச் செய்த நன்மைகளைப் பேசி வாக்கு கேட்கத் தேவையில்லை. மதுரை மேற்கு தொகுதியில் இந்த ஓராண்டு காலத்தில் பூங்காவாக இருக்கட்டும், மீனாட்சி அம்மன் கோவில் இடமாக இருக்கட்டும், மக்களின் அடிப்படைத் தேவைகள் எதை யெல்லாம் சொன்னார்களோ, அதையெல்லாம் செய்து கொடுத்துள்ளோம். ஆனால், நல்லது செஞ்சு ஓட்டுப் போடுவதை விட, நீங்கள் ஒரு முடிவை தீர்மானித்து ஓட்டுப் போட்டுள்ளீர்கள்.

இனி தி.மு.க.விற்கு அதைப்பற்றிப் பேசுவதற்கு வேலை கிடையாது. நாம் தி.மு.க.விற்காக நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம். இனி பேசியும் பிரயோஜனமும் இல்லை, பேச வேண்டிய தேவையும் இல்லை. நாம் இனி கட்சிப் பணியை மட்டும் ஆற்ற வேண்டும். மக்களுக்கு எல்லாம் தெரியும், மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.தி.மு.க.வை எவராலும் அழிக்க முடியாது.

மக்களுக்காக முன்னோடித் திட்ட ங்களை எல்லாம் செய்தவர்தான் கலைஞர். அவருடைய பிறந்தநாளை தி.மு.க. வின் உணர்வுள்ள தொண்டர்கள் கொண்டாடி வருகிறோம்.தி.மு.க. குடும்பத்தில் உள்ள பேத்தி சொல்லு ச்சு, பேரன் சொல்லுச்சு என்று ஓட்டுப் போட்ட தால்தான் இந்த நிலைமை. இதைவிட பல்வேறு சோதனைகளைச் சந்தித்து இந்த இயக்கத்தைக் கட்டிக்காத்து ள்ளார்கள். தலைவர் மு.க.ஸ்டாலினும் கட்டிக்காப்பார். இவ்வாறு அவர் பேசினார்.