தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓய்வின்றி பணியாற்றினார். பின்னர் தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு கொடைக்கானலுக்கு குடும்பத்தினருடன் சென்று ஓய்வெடுத்தார்.
தேர்தல் முடிவுகள் வந்து, அரசு அமைந்துள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் சென்று ஓய்வெடுக்க விரும்பினார். அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் மைசூருக்கு விமானம் மூலம் புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்து கார் மூலம் கூர்க் என்ற குடகு மலையை சென்றடைந்தனர். ஓய்வுக்குப் பின்பு ஜூன் 1-ந் தேதியன்று அவர்கள் சென்னைக்கு திரும்புகின்றனர். மகன் உதயநிதி ஸ்டாலின், மரு மகன் சபரீசன் ஆகியோரும் மு.க.ஸ்டாலினுடன் சென்றுள்ளனர்