பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திமுக என்றாலே ஊழல் பேர்வழிகள் என்று அர்த்தம்: அவர்களை கைது செய்வது தவறு இல்லை. வெளியில் வர முடியாத அளவிற்கு உள்ளே போட்டு வைக்க வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தீபம் ஏற்றியாக வேண்டும். தீபம் ஏற்ற முடியாது என்று சொல்லும் ஒவ்வொருத்தரும் பாரதத்தாயின் பிள்ளைகளாக இருக்க முடியாது.
ஏனென்றால் 1,931 லண்டன் கவுன்சில் தீர்ப்பு தெளிவாக உள்ளது. 33 செண்ட் தவிர முஸ்லீம்களுக்கு உரிமை இல்லை என்று.. அந்த 33 செண்ட்மே தவறு என்கிறேன். சிக்கந்தருக்கு தர்கா கோரிப்பாளையத்தில் உள்ளது. எனவே, தீபம் ஏற்ற மாட்டேன் என்று சொன்னால் இந்த அரசாங்கத்தை ஒரு நிமிடம் கூட வைத்து இருக்க கூடாது.”என்று கூறினார். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ள நிலையில், ஹெச்..ராஜா இவ்வாறு கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், கார்த்திகை திருநாளன்று பக்தர்கள் அனைவரையும் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரியும், தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்ற சரத்துக்கு எதிராகவும் ராம ரவிக்குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுக்களை நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இன்று இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கும் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.அதேநேரத்தில், ஒருமுறை நடவடிக்கையாக வரும் கார்த்திகை தீபத்தன்று தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது. இது இந்த வழக்கின் இறுதி ஒப்புதலாகக் கருதப்படக்கூடாது.தேவஸ்தானம் மற்றும் அரசு அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே விளக்கு ஏற்றுவதற்கு செல்ல முடியும். பொதுமக்கள் செல்ல முடியாது. தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.