தமிழக செய்திகள்

மக்களுக்கான களத்தில் தி.மு.க முன்வரிசையில் நிற்கும் - உதயநிதி ஸ்டாலின் உறுதி

சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி இருக்கிறார்கள்.

சென்னை,

மக்களுக்கான களத்தில் தி.மு.க முன்வரிசையில் நிற்கும் - உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இது தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கலைஞர் பிறந்த நாள்

நம் உயிரோடும் – உணர்வோடும் கலந்திருக்கும் கலைஞர் அவர்களின் 103-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் சென்ற ஜுன் மாதம் முழுவதும் சுமார் 256 நலத்திட்ட நிகழ்ச்சிகளை கழக நிர்வாகிகள் நடத்தி இருக்கிறார்கள்.

பாராட்டு விழா

அவர்களுக்கான பாராட்டு விழா அடையாறு முத்தமிழ் மன்றத்தில் இன்று நடைபெற்ற போது, அதில் பங்கேற்றோம். ஆட்சிப்பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்றும் மக்களுக்கான களத்தில் தி.மு.கழகம் முன்வரிசையில் நிற்கும் என்பதை உறுதி செய்கிற வகையில் கலைஞர் பிறந்த நாள் நலத்திட்ட நிகழ்ச்சிகளை நடத்திய சென்னை தென் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகளை பாராட்டி உரையாற்றினோம்.

கலைஞர் புகழ் ஓங்கட்டும்

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.