சென்னை,
முதல் - அமைச்சர் விஜயை ஒருமையில் பேசிய திமுக மகளிர் அணி நிர்வாகியை கனிமொழி எம்.பி. கண்டித்து பேசினார்.
சென்னையில் நேற்று முன் தினம் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா மற்றும் திமுக கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது திமுக மகளிர் அணி நிர்வாகியான சுதா தீனதயாளன் என்பவர் முதல் - அமைச்சர் விஜய் குறித்து ஒருமையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி அதே நிகழ்ச்சியில் திமுக மகளிர் அணி நிர்வாகியை கண்டித்து பேசினார்.
இது தொடர்பாக கனிமொழி எம்.பி. பேசியாதாவது,
நம்முடையை எதிரிகள் யாராக இருக்கிறார்கள் என்பதை வைத்து நாம் நம்மை உருவாக்கி கொள்ளக் கூடாது. அவங்க பேசட்டும் அவங்களுக்கு தெரிஞ்சது அவங்களுடைய தரம் அவ்ளோ தான். நாம் முப்பெரும் விழா கொண்டாட கூடிய திராவிட வழியாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களின் வழியிலேயே வந்திருக்க கூடியவர்கள் என்பதை நினைவிலே வைத்துக்கொண்டு பேச வேண்டும். இது தான் நான் கோரிக்கையாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பேசினார்.