தமிழக செய்திகள்

திமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை

திமுக - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதையடுத்து எந்தெந்த தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பதை முடிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியுடன் திமுகவினர் 2 கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துள்ளனர். நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 5 தொகுதிகளை கேட்டதாகவும், திமுக 3 தொகுதிகளை கொடுக்க முன்வந்ததாகவும், இதன் காரணமாக தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற உள்ள 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை