சென்னை,
தமிழ்நாடு பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெ.ஆற்றலரசு, சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்ககளைவிட நாங்கள் குறைந்த ஊதியம் பெற்று வருகிறோம். 15 ஆண்டு காலமாக பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகிறோம்.
தற்போது அதிகாரிகளின் உத்தரவு என்று கூறி மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை செய்யுமாறு தலைமை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.முதலில் எங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். அதன்பின்னர் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த உத்தரவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.