பி.எஸ்.மாசிலாமணி 
தமிழக செய்திகள்

நெல் கொள்முதலில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தை வெளியேற்றாதே: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

டி.என்.சி.எஸ்.சி என்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 1972ல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது.

சென்னை,

அரசு நெல் கொள்முதல் பணியிலிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தை வெளியேற்றாதே! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல். இது தொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

நிதி மூலதன தேவை

நெல் கொள்முதல் செய்து வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பணிகளை ஜிகிழிதிணிஞி.. என்கிற கூட்டுறவு விற்பனை இணையத்திடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.

டி.என்.சி.எஸ்.சி.. நிறுவனம் மூலம் தமிழக அரசு கடன் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில் இந்நிறுவன செயல்பாடுகளை டான்பெட்-க்கு மாற்றி புதிய கடன் பெறுவதற்கான ஏற்பாடு என்ற தகவல் வருகிறது. அரசின் நிதி மூலதன தேவை நெருக்கடியை தவிர்க்க மீண்டும் விவசாயிகளை பாதிக்க வைக்கலாது.

பேரிழப்பு

தமிழகம் முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்மணிகளை தனியார் வியாபாரிகளை நம்பி விற்பனை செய்யும் காலங்களில் விவசாயிகள் பெரிய இழப்பிற்குள்ளாயினர். அப்பொழுது மத்திய அரசின் இந்திய உணவு கழகம் தாலுகா அளவில் மட்டுமே இந்திய உணவு சேமிப்பு தேவைக்காக கொள்முதல் செய்து வந்தது. இதன் கொள்முதல் இல்லாத பகுதிகளில் தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்யும் நிலையில் விவசாயிகளுக்கு அரசின் விலை கிடைக்காததால் பேரிழப்பை அடைந்தனர்.

போராட்டங்கள்

இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கங்கள் உள்ளிட்ட விவசாய இயக்கங்கள் அரசு விலை நிர்ணயம் செய்தால் மட்டும் போதாது,, அரசு அறிவிப்பின்படி விவசாயிகளுக்கு விலை கிடைக்க பரவலாக அரசு நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தொடர் போராட்டங்கள் நடந்தது. இந்நிலையில்தான் டி.என்.சி.எஸ்.சி என்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் 1972ல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது. அறுவடை காலங்களில் மட்டுமே இதன் கொள்முதல் பணி இருக்கிற நிலையில் இந்நிறுவனத்தை தொடர்ந்து செயலாக்கிட விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருள்களையும் கொள்முதல் செய்யும் வருடாந்திர பணிகளாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

நல்ல ஆரோக்கியம் அல்ல

டி.என். சி.எஸ்.சி.... நிறுவனம் என்பது கொள்முதல் பணிகளை முறையாக புரிந்து கொண்ட, இதற்காக கட்டமைக்கப்பட்ட நிறுவனம். டான்பெட் என்பது இப்பணிகளுக்கு புதியது. மேலும் உரம் உற்பத்தி,, விநியோகம்,,இடுபொருள் சந்தைப்படுத்துதல், பூச்சி மருந்து தயாரித்து விநியோகம்,, குளிர்பதன கிடங்குகள் எனும் பல கூடுதல் பணிகள் இந்நிறுவனத்திற்கு உள்ளது. உறவினியோகமே இதன் மூலம் சீராக நடைபெறவில்லை. அரசின் தேவைக்கு,, கொள்முதலுக்கென்று உருவாக்கப்பட்டு,, செயலாற்றி வருகிற ஒரு கட்டமைப்பை குலைத்து விட்டு,,வேறு பணிகளுக்காக உருவாக்கப்பட்ட டான்பெட்டை இதில் ஈடுபடுத்துவது என்பது நல்ல ஆரோக்கியம் அல்ல.

தனியார் முகவர்கள் கொள்முதல்

இந்த நிலையில் டி.என்.சி.எஸ்.சி. ஐ, தவிர்த்து டெல்டாவை தவிர பிற மாவட்டங்களில் அரசின் சார்பான தனியார் முகவர்கள் கொள்முதல் செய்வதை எதிர்த்து போராடி கொண்டிருக்கிறோம். இவர்களிடம் நெல் விற்பனை செய்த விவசாயிகள் பலர் மாத கணக்கில் விற்பனை தொகை கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் டி.என்.சி.எஸ்.சி...ஐ.. நெல் கொள்முதல் பணியில் இருந்து விலக்கிவிட்டு, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்கிற கூட்டுறவு நிறுவனமே.... நெல் கொள்முதலையும் மேற்கொண்டால் படம் விற்பனைத் தொகை விவசாயிகளுக்கு கிடைக்காது என விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.

நிரந்தர கொள்முதல் நிறுவனம்

ஆகவே கொள்முதல் பணிகளை விரிவாக்கம் செய்து ஆண்டு முழுதும் செயல்படும் நிலையில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தையே நிரந்தர கொள்முதல் நிறுவனமாக உயர்த்திட வேண்டும். மடைமாற்றம் செய்யும் புதிய செயல் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,, தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT