தமிழக செய்திகள்

எந்தத் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு தெரியுமா?

அரசியல் பரபரப்புக்கு இடையே தமிழ்நாடு சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை,

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்கள் வருமாறு:-

  • பள்ளி கல்வித் துறை - ரூ.44,527 கோடி

  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - ரூ.39,609 கோடி

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ.29,863 கோடி

  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை - ரூ.23,357 கோடி

  • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை - ரூ.21,524 கோடி

  • உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை - ரூ.17,290 கோடி

  • சிறப்பு திட்ட செயலாக்கத் துறை - ரூ.17,150 கோடி

  • எரிசக்தி துறை - ரூ.15,828 கோடி

  • வேளாண் மற்றும் உழவர் நலத் துறை - ரூ.14,984 கோடி

  • உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை - ரூ.14,830 கோடி

  • போக்குவரத்து துறை - ரூ.13,561 கோடி

  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை - ரூ.11,532 கோடி

  • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - ரூ.9,818 கோடி

  • நீர்வளத் துறை - ரூ.9,264 கோடி

  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை - ரூ.8,852 கோடி

  • உயர் கல்வித் துறை - ரூ.8,393 கோடி

  • கூட்டுறவுத் துறை - ரூ.8,028 கோடி

  • கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை - ரூ.4,880 கோடி

  • தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை - ரூ.4,414 கோடி

  • சமூக நீதித் துறை - ரூ.3,937 கோடி

  • நீதி நிர்வாகத் துறை - ரூ.2,486 கோடி

  • குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை - ரூ.2,142 கோடி

  • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை - ரூ.2,022 கோடி

  • சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை - ரூ.1,762 கோடி

  • கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை - ரூ.1,678 கோடி

  • மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - ரூ.1,485 கோடி

  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - ரூ.1,051 கோடி

  • சுற்றுலா - கலை மற்றும் பண்பாட்டுத் துறை - ரூ.775 கோடி

  • இந்து சமய அறநிலையத்துறை - ரூ.708 கோடி

  • வணிக வரிகள் துறை - ரூ.651 கோடி

  • முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை - ரூ.475 கோடி

  • இயற்கை வளங்கள் துறை - ரூ.438 கோடி

  • செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை - ரூ.398 கோடி