சென்னை,
234 தொகுதிகளுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வேட்பாளரை இறுதி செய்யும் நடவடிக்கையாக வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கியது.
தி.மு.க.. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மனு தாக்கல் செய்தனர். நேற்று முன் தினம் மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம், இன்று பிற்பகலுடன் நிறைவடைந்தது. இறுதி வேட்பளர் பட்டியல் இன்று மாலை வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 79 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் மட்டும் மொத்தம் 83 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால அதில் 4 பேர் மட்டும் வேட்புமனுவை வாபஸ் பெற்றனர்.
இதற்கு அடுத்தப்படியாக, பெரம்பூரில் 47 வேட்பாளர்களும், கோவை தெற்கில் 44 வேட்பாளர்களும், கொளத்தூரில் 43 வேட்பாளர்களும், பரமத்தி வேலூரில் 43 வேட்பாளர்களும், ஆர்.கே.நகரில் 40 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.