தமிழக செய்திகள்

உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!!; ஜெயக்குமார் விமர்சனம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெறும் 26 காலி பணியிடங்கள் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியானது. இதில் வெறும் 26 காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது தேர்வர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் காலியிடங்களை அறிவிக்க வேண்டும் என்று தேர்வர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள் இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமாரும் விமர்சித்துள்ளர். டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

2026 ல் வெறும் 26 மட்டுமே*

தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 2026 - க்கான

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெறும் 26 காலி பணியிடங்கள் மட்டுமே இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது போட்டி தேர்விற்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மனதளவில் மிகப்பெரிய சோர்வை உண்டாக்கும்

இதுவரை தமிழ்நாட்டில், அரசு போட்டித் தேர்வு வரலாற்றிலேயே அதிக காலிப்பணியிடங்களை அறிவித்து நிரப்பியது நான் மனிதவளத்துறை அமைச்சராக இருந்த அம்மா ஆட்சியில் தான்.,

தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் 67,529 பேரும், இதர துறைகளில் 1,68,306 என மொத்தம் 2,35,835 அரசு பணி வழங்கப்பட்டது. மேலும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு 20% முன்னுரிமையும், மாற்று திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கியதும் அம்மா அரசில் தான்.

எனவே, இன்றைய கவர்ச்சி மாடல் அரசு, மாணவர்களின் நலன் கருதி காலி பணியிடங்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். *உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!!*