தமிழக செய்திகள்

கோயிலில் வைத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - நாகையில் அதிர்ச்சி சம்பவம்

கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

நாகை,

நாகை மாவட்டம் நாகூர் தோப்பு அருகே உள்ள பகுதியை சேர்ந்த கட்டிட பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கணவரை இழந்த பெண் ஒருவர் நாகத்தோப்பு அருகே கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது சகோதரியின் வீட்டில் தங்கியுள்ளார்.

நேற்று இரவு அந்த பெண் சகோதரியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி அவரிடம் இருந்த கூலிப் பணத்தை பறித்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கோயிலுக்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி வீட்டிற்கும் சென்று அந்த இளைஞர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்