தமிழக செய்திகள்

விண்ணைத் தொடும் கனவுகளைக் காணுங்கள்... குழந்தைகளுக்கு வானதி சீனிவாசன் வாழ்த்து!

அழகான மழலைப் பருவத்தை இனிமையாகக் கொண்டாடுங்கள் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

சென்னை,

விண்ணைத் தொடும் கனவுகளைக் காணுங்கள் என குழந்தைகளுக்கு தேசிய பாஜக முன்னாள் மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் தினம்

குட்டிக் குட்டி சிரிப்புகள், குறும்புகள், கற்பனைகள், எண்ணற்ற கனவுகளுடன் உலகை வலம் வரும் அன்புக் குழந்தைகள் அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

விண்ணைத் தொடும் கனவுகளைக் காணுங்கள்…புதிய விஷயங்களைக் குதூகலத்துடன் கற்றுக்கொள்ளுங்கள்…

நல்ல பண்புகளையும் அன்பையும் மனதில் விதைத்துக் கொள்ளுங்கள்…தன்னம்பிக்கையுடன் வெற்றிப் பாதையில் சிறகடித்துப் பறந்து செல்லுங்கள்!

செல்போன், சமூக ஊடகங்களில் மூழ்கிக் கிடக்காமல், நண்பர்களுடன் விளையாடி, சிரித்து, மகிழ்ந்து உங்கள் அழகான மழலைப் பருவத்தை இனிமையாகக் கொண்டாடுங்கள்!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT