திருநெல்வேலி மாநகர போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடத்தில் வைத்து மது அருந்திய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் நெல்லை மாநகர போலீசார் ரோந்து பணிக்கு சென்றபோது, சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சீட்டு கட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.