கார்த்திக் ராஜ் 
தமிழக செய்திகள்

சென்னையில் நகை திருட்டு வழக்கில் ஓட்டுநர் கைது

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த, குற்றவாளியான ஓட்டுநராக பணிபுரிந்து வரும் 29 வயது கார்த்திக் ராஜை அடையாளம் கண்டனர்.

சென்னை,

சங்கிலிப்பறிப்பு வழக்கில் குற்றவாளி கைது; திருட்டு நகை மீட்பு. இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சங்கிலிப்பறிப்பு

22.08.2026 அன்று மாலை சுமார் 04.52 மணியளவில், ஊனமாஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் புகார்தாரர் லெபனான் ரெச்சல் தேவசெல்வி, வயது 51, அவர்கள் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது, வண்டலூர் ரயில்வே பாலம் அருகே முகக்கவசம் அணிந்திருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரை வழிமறித்து சங்கிலிப்பறிப்பில் ஈடுபட்டார்.

வழக்குப்பதிவு

குற்றவாளி சுமார் 7 சவரன் எடையுள்ள தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு, ரெயில் தண்டவாளம் வழியாக தப்பி சென்றார். புகாரின் அடிப்படையில், டி7 ஓட்டேரி காவல் நிலையத்தில் குற்ற எண் 202/2026-ல், சம்பந்தப்பட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

குற்றவாளி கைது

தாம்பரம் மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்படியும், தாம்பரம் மாவட்ட காவல் துணை ஆணையரின் மேற்பார்வையிலும், டி7 ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் அல்பின்ராஜ் தலைமையில், குற்றவாளியை கைது செய்து திருடப்பட்ட சொத்துகளை மீட்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

சிசிடிவி கேமரா பதிவு

விசாரணையின் போது, தனிப்படையினர் சிசிடிவி கேமரா பதிவுகள், பொது போக்குவரத்து விவரங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்களின் மூலம் சந்தேக நபரின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிந்தனர். விசாரணையில், முகக்கவசம் அணிந்திருந்த சந்தேக நபர் முடிச்சூரிலிருந்து நடந்து வந்து, முடிச்சூர் சாலை நட்டேசன் பள்ளி பேருந்து நிறுத்தத்தில் சுமார் மதியம் 01.00 மணியளவில் பேருந்தில் ஏறியதும், யுபிஐ மூலம் பேருந்து பயணச்சீட்டு வாங்கியதும் தெரியவந்தது.

சங்கிலிப்பறிப்பு

அவர் மதியம் சுமார் 01.45 மணியளவில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இறங்கினார். பின்னர் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு சென்று, அங்கு சுமார் 02.45 மணி வரை இருந்தார். அதன்பிறகு வண்டலூர் ரெயில் நிலையம் நோக்கி சென்று, சுமார் 03.00 மணியளவில் அங்கு சென்றடைந்தார். சங்கிலிப்பறிப்பு சம்பவம் மாலை சுமார் 04.52 மணியளவில் வண்டலூர் ரெயில்வே பாலம் அருகே நடைபெற்றது. குற்றத்தை செய்த பின்னர், குற்றவாளி அப்பகுதியிலிருந்து வெளியேறி, விருதுநகருக்கு சென்றார்.

தீவிர விசாரணை

தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையின் மூலம், சந்தேக நபரின் மதியம் 01.07 மணி முதல் மாலை 07.00 மணி வரையிலான நடமாட்டத்தை விரிவான விசாரணையின் மூலம் கண்டறிந்து உறுதி செய்தனர். பேருந்துகள், ரெயில் நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 40 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

சிடிஆர் அறிக்கை

பேருந்துகள் மற்றும் ரெயில்களில் பதிவான சிசிடிவி காட்சிகள், பயணச்சீட்டு பரிவர்த்தனை விவரங்கள், மொபைல் போன் பரிவர்த்தனை பதிவுகள், வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பிற தொழில்நுட்ப ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. மேலும், சிடிஆர் அறிக்கையும் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

கார்த்திக் ராஜ்

தொடர்ச்சியான பின்தொடர்தல் நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில், தனிப்படையினர் சந்தேக நபர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த, குற்றவாளி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் கார்த்திக் ராஜ், வயது 29, என்பதை அடையாளம் கண்டனர். இதையடுத்து, குற்றவாளி விருதுநகரிலிருந்து தனிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.

தங்க நகை மீட்பு

விசாரணையின்போது, சங்கிலிப்பறிப்பு குற்றத்தில் தான் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகை மீட்கப்பட்டது. சிறப்புப் படையினரின் ஒருங்கிணைந்த முயற்சிகள், விடாமுயற்சியுடன் மேற்கொண்ட விசாரணை, விரிவான சிசிடிவி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரித்ததன் மூலம் இவ்வழக்கு கண்டுபிடிக்கப்பட்டு, திருடப்பட்ட சொத்து மீட்கப்பட்டது.

பாராட்டு

காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர், மகேஷ் குமார் அகர்வால், ஐபிஎஸ், தாம்பரம் மாநகர காவல் ஆணையர்பிரேம் ஆனந்த் சின்ஹா,ஐபிஎஸ், தலைமையில் மேற்கொள்ளப்பட்ட தனி படையினரின் சிறப்பான பணியை வெகுவாக பாராட்டினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT